அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

திருமணச்சடங்குகள்

தேவாங்கர் விவாக கிரியைகள்   

       வேண்டுகோள் :- தேவாங்கர் என்னும் சொல் தெய்வத் தன்மையை இயற்கையாக உடையவர் என்றும், பரப்பிருமத்தின் நேரடி வம்சாவழியினர் என்றும் பொருள்படும். நீரில் பல உயிரினங்களும், தாவரங்களும் தோன்றுகின்றன இருப்பினும் நீரில் தோன்றுவது என்னும் பொருள் தாமரை ஒன்றனையே குறிக்கும்.
இனி, பூ என்னும் பெயரும் தாமரை ஒன்றனையே குறிக்கும். மற்றப் பூக்களை மல்லிகைப்பூ, இருவாட்சிப்பூ என விதந்து கூற வேண்டும். ஆன்றோர்கள் “ பூ எனப்படுவது பொறிவாழ் பூவே“ என அறுதியிட்டுக் கூறினர்.
தெய்வத் தன்மை “தேவாம்சம்“ கொண்ட குலங்கள் பல இருக்கின்றன. இருப்பினும் “தேவாங்கர் என்னும் பெயர் மற்ற குலங்களைக் குறிக்காமல் தேவாங்க குலத்தை மட்டும் குறிக்கின்றது.
ஒருகாலத்தில் தேவாங்க குல மக்கள் சிறந்த வைதிக நெறி முறைப்படி வாழ்ந்தனர். கால வேறுபாடுகளினாலும், அறியாமையாலும் இன்று தம் நெறி முறைகளைச் சிறிது சிறிதாக மறந்து வருகின்றனர். பிறப்பு முதல் இறப்புவரை பதினாறு விதமான வைதிகச் சடங்குகளைத் தேவாங்கர் தம் வாழ்வில் நடத்துகின்றனர். இவை “சோடஷ கர்மாக்கள்“ எனப்படும். இப்பதினாறில் திருமணம் ஒன்று.
தேவாங்கரின் திருமண கிரியைகள் பற்பல. இரண்டு பந்தல்கள் இட்டு, ஏழு நாட்கள் திருமணங்கள் நடந்து இருக்கின்றன. பெண் வீட்டார் பந்தல், மாப்பிள்ளை வீட்டார் பந்தல் என இவற்றில் நாகவல்லி முதலான சகல சடங்குகளுடன் திருமணங்கள் நடந்தன.
இன்றைய வாழ்க்கை வேகம் மிக்கது. அதனால் திருமணங்கள் இரவில் கங்கணம் கட்டுதல், விடிந்தால் முகூர்த்தம் என்னும் அளவில் சுருங்கி இருக்கின்றன.
சுருங்கிய நிலையிலும் செய்ய வேண்டிய கிரியைகள் அனைத்தும் செய்யப்படுகின்றனவா? எனில் இல்லை, புரோகிதர்கள் மந்திரங்களை மறக்கின்றனர். விவரம் தெரிந்த புரோகிதர்கள் குறைந்து விட்டனர். தேவாங்கர் குலப் பெரியோர்கள் புரோகிதர்களுக்குச் சரியான ஆதரவு தந்து, சமுதாய ரீதியாக இதற்கு விடை காணல் வேண்டும். விடை கண்டால் பாரம்பரியம்மிக்க தேவாங்கர் கலாச்சாரம் செழிப்பு அடையும்.
                               இல்லறம்
     அறம் என்பது விதித்தன செய்தல், விலக்கியன ஒழிதல் என்பார் பரிமேல் அழகர். இல்லறத்திற்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து வாழ்தல். இல்லறத்திற்குரிய ஒழுக்கம் இல்லறம் எனப்படும். ஒழுக்கமே அறம். இவ்வொழுக்கம் இல்லறம், துறவறம் என இருவகைப்படும். துறவற ஒழுக்கத்தையும் காப்பாற்றக் கூடியது இல்லற ஒழுக்கம். “இல்லறம் அல்லது நல்லறம் அன்று“ என்றார் ஔவையர். கற்புடை மனைவியுடன் ஒழுகும் ஒழுக்கமே இல்லறம். எனவே வாழ்க்கை துணைநலம் என்று மனைவி கூறப்பட்டாள். அவள் கணவனுக்கு அடிமை அல்லள். அவள் கணவனுக்குத் துணை. “சகதர்மினி“ என்று வடமொழியில் மனைவிக்குப் பெயர். இல்லறம் நடத்துவதில் கணவனுக்குச் சகாயம் (உதவி) செய்பவள் என்பது இதன் பொருள்.
(1) பிதுரர் (2) தெய்வம் (3) விருந்தினர் (4) சுற்றத்தார் (5) தான் என்னும் இவ்வைரையும் காக்க வேண்டியது இல்லறத்தார் கடமை.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ற
கைம்புலத்தா றோம்பல் தலை“.
                   திருமண வகைகள்
   பிரம்மச்சரியம் முடிந்தபின் இல்லறம். திருமணத்தில் தான் கன்னிப்பெண் ஒருவனுக்கு மனைவி ஆகின்றாள். இல்வாழ்க்கையின் குணம் அன்பு. இதன் பயன் அறம். ஒருவன் பெறும் மிக உயர்ந்த செல்வம் நற்குணம் நற்செய்கைகள் கொண்ட மனைவியே. “மங்கலம் என்ப மனைமாட்சி அன்றோ?“
சாத்திரங்கள் திருமணங்கள் எட்டு என்கின்றன. அவை (1) பிரம்மவிவாகம் (2) தைவ விவாகம் (3) ப்ரஜாபத்ய விவாகம் (4) ஆர்ஷவிவாகம் (5) காந்தர்வ விவாகம் (6) ஆஸீரவிவாகம் (7) ராக்ஷஸ விவாகம் (8) பைசாசம் என. தமிழ் இலக்கண நூல்களும் இவ்வெட்டுவகைகளை ஒப்புக் கொள்கின்றன.
இவ்வெட்டு வகைத் திருமணங்களுள் எவற்றினுள்ளும் பெண் வீட்டார் வரனுக்குத் தரும் வரதட்சிணை என்பது அறவே இல்லை. இத்திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட்டாருக்குப் பொருள் கொடுத்து இருக்கின்றனர்.
செட்டிக்காரர் முன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்போது (1)தெரவு (பரியம்) (2) நகை (3) சேலை இம்முன்றினையும் பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குத் தருகின்றனர். பெண் வீட்டார் தருவது என்பது பேசப்படுவதில்லை.
பெண்ணுக்கும் அவள் உறவினருக்கும் தம் சக்திக்கு ஏற்ற பொருள்களைக் கொடுத்து மணந்து கொள்வதை மானுஷ விவாகம் என்கிறார் வசிஷ்டர்.
வீட்டு வாடகைப் பத்ரம், நிலகுத்தகைப் பத்ரம் போன்று திருமண ஒப்பந்தம் என்பர் சில நவீனர்கள். திருமணம் என்பது இகபரசுகங்கள் இரண்டனையும் வழங்குவது என்பது தேவாங்கர் துணிபு.
திருமணம் புனிதமானது. அது ஞானம், அழகு, சீலம், தனம், கீர்த்தி, ஆயுள் ஆகியவற்றை வழங்கும் என மநு, வசிஷ்டர், ஆபஸ்தம்பர், போதாயனர், ஆச்வலாயனர் ஆகியோர் தத்தம் கிருஹ்ய சூத்ரங்களில் கூறி உள்ளனர்.
திருமண கிரியைகள்
1) நிச்சயதார்த்தம் 2) தேவதா பிரஸ்தம் 3) சம்பந்தி தாம்பூலம் 4) பால ஸ்தம்பன பிரதிஷ்டை 5) கங்கண தாரணம் 6) நாந்நிசெய்தல் 7)முகூர்த்தத்தின் முன் செய்ய வேண்டியன 8) காசி யாத்திரை 9) குடஜீராரோஹணம், கன்யா நிரீக்ஷணம் 10) கன்யாதானம் 11) மாங்கல்யபூசை 12) மாங்கல்ய தாரணம் 13)அம்மி மிதித்து த்ருவனைக் காணல் 14) அட்சதாரோபணம் 15) பூரிதானம்-சுகாசினி பூஜை 16) சாகவல்லி 17) கங்கணம் அவிழ்த்தல் 18) மஞ்சள் நீராட்டம் (அல்லது) வசந்தம்.
1. நிச்சயதார்த்தம்
    இச்சம்பிரதாயம் மணமகள் இல்லத்தில் நடைபெறும். மணப்பெண் வீட்டாரின் செட்டிகாரர் மற்றும் உறவினர் புடைசூழ பெண்ணின் இல்லம் பொலிவுற்று இருக்கும். இச்சபைக்குப் பெண் வீட்டாரின் செட்டிகாரர் தலைமை ஏற்று இருப்பார்.
 மாப்பிள்ளையின் தகப்பனார் தன் குலம், கோத்ரம் இவைகளைக் கூறிப் பெண் பார்க்கவும், நிச்சயம் செய்து கொள்ளவும் தான் வந்திருப்பதாகவும், நாள் நட்சத்திரம், வழிப்பயண சகுணங்கள் சுபமாக இருப்பதால் நிச்சயம் செய்து வைக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும். செட்டிகாரர் பெண்ணின் தகப்பனாரிடம் விவரம் கூற, பெண்ணின் தந்தையார் பெரியோர்கள் மற்றும் தன் மனைவி முதலியோரிடம் கலந்து சம்மதம் கூறுவார்.
அப்போது மாப்பிள்ளையின் தகப்பனார் கூற வேண்டிய மந்திரம்
“வாசா தத்வா த்வயா கன்யா
புத்ரார்த்தம் ஸ்வீகுரு தம் மமா
கன்யா வலோகன விதௌ
நிஸ்சி த்த்வ்ம் ஸீகீ பவா“ 
(பொருள் – என் மகனுக்கு உன் பெண்னைத் தருவதற்கு நீர் வாக்கு தத்தம் செய்து கொடுக்க வேண்டும். பெண்ணைப் பார்க்க நீர் அனுமதிக்க வேண்டும். சுபமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்வோம்.) மணமகளின் தகப்பனார் அதன்பின் கூறும் மந்திரம்
“வாசா தத்வா மயாகன்யா
புத்ரார்த்தம் ஸ்வீகுருர் த்வயா
வராவ லோகன விதௌ
நிஸ்சி த்த்வம் ஸீகீ பவா“     
(பொருள் – உம் மகனுக்கு என் பெண்ணைக் கொடுப்பதாக நான் வாக்கு தத்தம் செய்கிறேன். வரனை (மாப்பிள்ளையை) நான் பார்த்த சுபமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம்.)
பெற்றோர்களுக்கு மந்திரம் கூறத் தெரியவில்லை எனில் அவர்களுக்காகப் புரோகிதர் கூறுவார்.
                          2. தேவதா பிரஸ்தம்
   குலதெய்வம், இஷ்ட தெய்வம், கிருஹதெய்வம் என ஒவ்வொருவருக்கும் பல தெய்வ வணக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இது தன் வீட்டுத் தெய்வத்தை (கிருஹ தெய்வத்தை) வணங்குதல் ஆகும்.
“மனெ தேவரு மொக்காது“ என்று அழைக்கப் பெறும் இச்சடங்கு வீட்டுத் தெய்வத்தைத் திருப்தி செய்கின்றது. இவ்வழி பாட்டில் மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு அங்கு நூல் முதலான மரியாதைகள் செய்யப்பெறும். இச்சடங்குகள் தேவதா ப்ரஸ்தம் எனப்படும்.
என் மகனையும் எங்களையும் அனுக்கிரகித்து புத்திரர், பௌத்திரர்களும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்படி ஆசீர்வசித்துக் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக்கொள்ள வேண்டும். இச்சடங்கு ஆவாரஞ்செடி (ஆம்ரிக்கெ கிட) அடியில் வழிபாட்டுடன் செய்யப் பெறுகின்றது.
                        3. சம்பந்தி தாம்பூலம்
   உற்றார், உறவினர் முன் செட்டிகாரர் தலைமையில் இவ்வைபவம் நடைபெறும்.
பெண்ணின் தகப்பானரும், மாப்பிள்ளையின் தகப்பனாரும் தொடைமீது தொடைபடும்படி நெருங்கி அமர்ந்து கொள்கின்றார்கள். சந்தனம் பூசிக் கொள்ளல் முதலியன நடைபெறுகின்றன.
பின் பெண்ணின் தகப்பனார் தன் கோத்ரம் மற்றும் மூன்று தலைமுறையினர் பெயர்களைக் கூறி இன்ன பெயருள்ள கன்னிகையை என்று கூற வேண்டும்.
1. இன்ன கோத்ரம்
2. இன்னாருக்கு முப்பேத்தி
3. இன்னாருக்குப் பேத்தி
4. இன்னாருக்கு மகள் ஆன இன்னபெயர் உள்ள கன்னிகையை என்று
கூற வேண்டும்.
அதன் பின் மாப்பிள்ளையின் தகப்பனார் தன் கோத்ரம் மற்றும் முன்று தலைமுறையினர் பெயர்களைக் கூறி இன்ன பெயருள்ள மணமகனுக்கு என்று கூற வேண்டும்.
1. இன்ன கோத்ரம்
2. இன்னாருக்கு முப்பேரன்
3. இன்னாருக்குப் பேரன்
4. இன்னாருக்கு மகன் இன்னபெயர் உள்ள வரனுக்கு என்று இப்படி இருவரும் மாறி மாறி மும்முறை கூற வேண்டும். மூன்றாம் முறையில் பெண்ணின் தகப்பனார் கொடுத்தோம் என்று சொல்ல பிள்ளையின் தந்தை ஏற்றுக் கொண்டோம் என்று கூறி இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
                 4. பால ஸ்தம்பப் பிரதிஷ்டை
  விக்னேஸ்வர பூஜைக்குப் பின் ஒன்பது கணுக்கள் உள்ள பச்சை மூங்கிலில் அரசங்கொத்தைக் கட்ட வேண்டும். மஞ்சளில் நனைத்த துணியில் நவதான்யம், காசு முதலியன முடிந்து,இம்மஞ்சள் துணியால் முங்கிலையும், அரசங்கொழுந்தையும், தர்ப்பையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இது ஸ்தலது கொம்பு எனப்படும்.
மூன்று சுமங்கலிகள் இதனுக்குப் பாலாபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் பூசி நட வேண்டும். புரோகிதர் விவாக வேதிகையில் புண்யாக வசனம் செய்ய வேண்டும்.
                 5. கங்கண தாரணம்
புது மண் பானைகளுக்குச் சுண்ணாம்பு பூசி காவிக்கல்லால் எழுதி அலங்காரம் செய்து அவற்றை ஓர் அறையில் அடுக்கி விளக்கேற்றி மணமக்களைப் படமரத்தின்மீது உட்கார வைக்க வேண்டூம். தேவாங்கர் குலத்தொழில் நெசவு. நெசவுக்கு முக்கியம் படமரம் (குண்டெ) அமரும்போது ஓர் ஆசனம்இட்டு அமர வேண்டும். இருவரும் அமர படமரம் தக்கதாக இருக்கின்றது. பானைகளைப் பிள்ளை வீட்டார் அடுக்கி வைக்க வேண்டும். மணமக்களுக்கு மந்திர பூர்வமாகக் கங்கணம் கட்ட வேண்டும். கட்டியபின் மணமகன் கையில் குறுங்கத்தி (பிச்சுவா) கொடுத்து விடவேண்டும்.இக்கத்தி கங்கணம் அவிழ்க்கும் வரை மாப்பிள்ளையின் கரத்தில் இருக்க வேண்டும்.
கங்கணம் கட்டுதல் செட்டிகாரரின் அனுமதியுடன் நடக்க வேண்டும். மணமக்களின் தாய்மாமன்மார் கங்கணம் கட்டுவது நடைமுறையில் இருந்து வருகின்றது.
மணமகனுக்குக் கங்கணம் கட்டும் மந்திரம்
“விஸ்வேத்தாதே – ஸவ நேஷீப்ரவாச்யா
யாச கர்த்த மகவன னிந்த்ர ஸீன்வதே
பாராவதம் யத்புரு ஸம்ப்ருதம்
வஸ்பவா வ்ருணோ ஸரபாயே ருஷிபந்த்தே“
பெண்ணுக்குக் கங்கணம் கட்டும் மந்திரம்
‘ஸ்ரீயே ஜாத ஸ்ரீய அநிர்யாய
ஸ்ரீயம் வயோ ஜரித்ருப்யோ ததாதி
ஸ்ரீயம் வஸாநா அம்ரு தத் வமாயன்
பவந்தி ஸத்யா ஸமிதா மித த்ரெள“
பின் மணமக்களுக்கு தாய்மாமன்மார் பலகாரம் உண்ணுவித்தல் நடைபெறும்.
6. நாந்தி செய்தல் (நாந்தி சிரார்த்தம்)
  முன்னோர் வழிபாடு என்பது நம் நாட்டின் மிக உயரிய பாரம்பரியம். வேத சாத்திரங்கள் முன்னோர்களைப் பிதிரர் என அழைக்கும். பிதிர்லோகத்தில் இருந்து கொண்டு முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்கின்றார்கள். அவர்களைத் திருப்தி செய்ய வேண்டும். புது வாழ்வில்  ஈடுபடும் தம்பதியினருக்குப் பிதிரர்களின் நல்லாசியைப் பெற்றுத் தரவே இவ்வழிபாடு செய்யப்படுகின்றது. இச்செயல் நாந்நி சிரார்த்தம் எனப்பெறும்.
தாய், தகப்பனார் தமக்கு நடுவில் மாப்பிள்ளையை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். அட்சதை அரிசி நிரம்பிய தட்டை, மணமகனின் தகப்பனார் தமது துடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் கொம்புகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் மந்திரம் சொல்லும் போது மஞ்சள் கொம்பு ஒன்றனை எடுத்து அதனைத் தட்டில் தட்டியப்பின் தட்டில் உள்ள அட்சதை அரிசியில் வைக்க வேண்டும். இச்சடங்கில் நினைக்க வேண்டிய பிதிரர்கள் (முன்னோர்கள்).
மாப்பிள்ளையின் தகப்பனார் இச்சடங்கை இவ்வழிப்பாட்டைச் செய்கின்றனர். எனவே அவர் தகப்பனார், பாட்டன், முப்பாட்டன் என்கின்ற முவரையும் தன் தாயார், பாட்டி, முப்பாட்டி ஆகியோரையும் அதன்பின் மாப்பிள்ளையின் தாயார் வழியில் அவள் தாயார், பாட்டி, முப்பாட்டி ஆகியோரையும் இச்சடங்கில் எண்ண வேண்டும். நாந்நி சிரார்த்தத்தில் மாப்பிள்ளையின் தகப்பனார் கூறவேண்டிய மந்திரங்கள்.
முதலில் தன் கோத்ரம் கூறி
1) “அஸ்மத் பித்ரு நாந்நி முகாநாந்நி“
என முன்று முறை கூற வேண்டும். ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பை எடுத்துத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
2)  தன் கோத்ரம் கூறி
“அஸ்மத் பிதாமஹம் நாந்நி முகா நாந்நி“ என மூன்று முறை கூறி, ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பைத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
3)  தன் கோத்ரம் கூறி
“அஸ்மத் பிரபிதாமஹம் நாந்தி முகா நாந்நி“ என முன்று முறை கூறி, ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பைத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
இதன்பின் மாப்பிள்ளையின் தாயார் வழி கோத்ரம் கூறி பின் வரும் மந்திரங்களைக் கூறி செய்ய வேண்டூம். இதனைச் செய்ய வேண்டியவரும் மாப்பிள்ளையின் தகப்பனார் ஆவார்.
1)  மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் கூறி
“அஸ்மத் மாதரம் நாந்நி முகாநாந்நி“ என்று மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பைத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
2)  மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் கூறி
“அஸ்மத் பிதாமஹிம் நாந்நி முகாநாந்நி “ என்று மும்முறை கூறி ஒவ்வொருமுறையும் மஞ்சள் கொம்பைத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
3)   மாப்பிள்ளையின் தாய்வழி கோத்ரம் கூறி
“அஸ்மத் பிரமதா மஹிம் நாந்நி முகாநாந்நி“ என்று மும்முறை கூறி ஒவ்வொரு முறையும் மஞ்சள் கொம்பைத் தட்டில் தட்டி அட்சதையில் வைக்க வேண்டும்.
தகப்பனாருக்கு மந்திரம் கூறத் தெரியவில்லை என்றால் புரோகிதர் சொல்லப் பின் தொடர்ந்து கூறலாம். அதுவும் முடியாத போது அவருக்காகப் புரோகிதர் கூறலாம்.
             7. முகூர்த்தத்தின் முன் செய்ய வேண்டியன
நாந்நி சிரார்த்தம் செய்து முடித்த பின், முகூர்த்தத்திற்கு முன் செய்ய வேண்டியன கிரியைகளைப் புரோகிதர் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
    1. விக்னேஸ்வர பூஜை
2.  வருணகலச பூஜை
3.  ஸ்ரீ சவுடேஸ்வரி பூஜை
4. தேவலர் பூஜை
5. அக்னி கார்யம்
ஆகியனவற்றைச் செய்ய வேண்டும்.
ஓம் பூர்; புவ; ஸீவ:
தத் ஸவிதுர் வரேணியம்
பார்க்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோன ப்ரசோதயாத்“
  என்னும் இக்காயத்ரி மஹா மந்திரத்தை மணமகனின் வலது காதில், அவன் தகப்பனார் உபதேசம் செய்ய வேண்டும். உபதேசம் செய்யும் போது அவர் தமது வலது கையை மகனின் சிரசில் வைத்து இருக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட ஒற்றை முடிப் பூ நூலை மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டும்.
இம் முதற்பூ நூல் (ஒற்றை முடி) தாய் தந்தையரால் அணிவிக்கப்பட வேண்டும். இது “பிரம்மோபதேசம்“ எனப்படும்.
                 8. காசியாத்திரை
இதன்பின் மணமகன் தன் பிரம்மச்சர்ய விரதத்தை முடித்துக் கொண்டு வருவதற்காகத்தன் பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டும். அப்போது,
மணமகன் கூறவேண்டிய மந்திரம் :-
சரிதம் ப்ரம்ம சர்யோஹம் க்ரதௌ வ்ரத சதுஷ்ட்டய
காஸீ யாத்ராம் க4மிஷ் அநுஜ்ஞாம் தேஹிமே ஸீபாம்
மாதா ப4வதி பி4க்ஷாம் தேஹி“           
(பொருள் :- நான் பிரம்மச்சர்ய விரதத்தை கைக்கொண்டு இருக்கின்றேன். இவ்விரதத்தை முடித்துக் கொண்டு வருவதற்கு காசியாத்திரை செல்கின்றேன். எனக்குச் சுபமாக உத்தரவு கொடுக்க வேண்டும். தாயே! பிட்சை இடுக.)
இச்சமயத்தில் மாப்பிள்ளையின் தோளில் தொங்கும் ஜோளியில் (ஜோல்னாபை) உறவினர்கள் பிட்சை இடுவார்கள். இந்தப் பிட்சை தட்சிணையாக மாப்பிள்ளைத் தோழனுக்குச் சேரும். மணமகன் பிட்சை பெற்றுக் கொண்டு ஆலயம் சென்று அமர்கின்றான்.
பெண்ணின் தாய், தகப்பனார் ஆலயம் சென்று, மாப்பிள்ளைக்குப் பாதபூசனை செய்கின்றனர். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.
“ஸாலங்காரம் மமஸீதாம் கன்யாம் தாஸ்யாமி தேவதாபாணீம்
க்ரஹிஸ்ச சாக்னிஸ்ச கச்சமத் கச்சமத் க்ருஹம்“
(பொருள் :- அலங்காரத்துடன் தேவதை போல் வீட்டில் இருக்கும் என் மகனை உனக்குப் பாணிக்கிரஹணம் செய்து, கன்யா தானம் செய்து வைக்கின்றோம், காசியாத்திரையை விடுத்து என் வீட்டிற்கு வருக! வருக! வருக! பெண்ணின் பெற்றோர் அழைத்து வருகின்றனர்.)
9. குடஜீராரோஹணம், கன்யா நிரீக்ஷணம்
காசி யாத்திரையில் இருந்து மணமகன் அழைத்து வரப்படுகின்றான். மாப்பிள்ளை கிழக்கு முகமாகவும், பெண் மேற்கு முகமாகவும் அமர்கின்றனர். இருவருக்கும் நடுவில் முகம் தெரியாத அளவில் திரை. நாட்டுச் சர்க்கரை ஜீரகம் இரண்டும் கலந்ததை மாப்பிள்ளை முதலில் பெண்ணின் சிரசில் தூவ, பின் பெண் மாப்பிள்ளை சிரசில் தூவப்பின் முகத்தளவாகத் திரை இறக்கி முகம் காட்டல். பெண்ணின் பக்கம் ஏழு சுமங்கலிகள் ஏழு நெய் மாவிளக்கு ஏந்தி நிற்க வேண்டும்.
புரோகிதர்  : எதிரில் என்ன தெரிகிறது?
மணமகன்  :  ஜோதி தெரிகின்றது.
புரோகிதர்   :   ஜோதிக்குப் பக்கத்தில் என்ன இருக்கின்றது?
மணமகன்   :  ஜோதிக்குப் பக்கத்தில் கன்னிகைதான் இருக்கின்றாள்.
புரோகிதர்   :   கன்னிகையை மணந்து கொள்கின்றாயா?
மணமகன்   :   மணந்து கொள்கின்றேன்.
புரோகிதர்   :   பூதேவி, ஆகாயவாணி சாட்சியாக, ஸ்ரீசவுடேஸ்வரி,
இராமலிங்கேஸ்வரர்சாட்சியாக, அக்கினி சாட்சியாக,
பத்தாயிரம் குலத்தார் சாட்சியாக மணம் செய்து
கொள்கிறாயா?
மணமகன்    :     பூதேவி, ஆகாயவாணி சாட்சியாக, ஸ்ரீசவுடேஸ்வரி,
இராமலிங்கேஸ்வரர் சாட்சியாக, அக்கினி சாட்சியாக,
பத்தாயிரம் குலத்தார் சாட்சியாக மணம் செய்து
கொள்கின்றேன்.
            10.கன்யாதானம்
    இதுதாமரை வார்த்தல் எனப்படும். தாரை வார்த்த பின்புதான் மாங்கல்ய தாரணம் (தாலி கட்டுதல்) நடைபெற வேண்டும். ஜனகன் தாரை வார்த்தபின் சீதையின் கழுத்தில் இராமபிரான் தாலிகட்டினார். இமவான் தாரை வார்த்தபின் தான் பார்வதி கழுத்தில் சிவபிரான் தாலி கட்டினார். இந்திரன் தாரை வார்த்தபின் பார்வதி தான் தெய்வயானை கழுத்தில் முருகன் தாலி கட்டினார் எனபன பல ஆதாரங்கள்.
என்ன காரணத்தினாலோ தெரியவில்லை ஒரு நகரத்தினுள் இம்முறை சற்று பிறழ்ந்து காணப்படுகிறது. தாலிகட்டியபின் தாரை வார்க்கப்படுகிறது. இதுமுறை அன்று. சாஸ்திர சம்மதமும் அன்று.
     மாப்பிள்ளையின் தாய், தந்தையார் கையில் தட்டுடன் நிற்க தட்டில் மாப்பிள்ளையின் கைகளை அஞ்சலி பரமாக வைக்க வேண்டும். மணமகள் தன் கைகளை மாப்பிள்ளையின் கைகள் மேல் அஞ்சலி பரமாக வைக்க வேண்டும்.
பெண்ணின் கையில் தாம்பூலத்துடன் சக்திக்குத்தக்க திரவியம் வைக்க வேண்டும். பெண்ணின் கைகளை அவள் தகப்பனார பிடித்துக் கொள்ள அவள் தாயார் கலச விழுந்து, பின் தாம்பூலத்துடன் மாப்பிள்ளையின் கையில் சேர்ந்து, பின் தாம்பூலத்துடன் தட்டில் சேரவேண்டும். இத்தட்டினை மணமகனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டு பூரண கும்பத்தில் வைக்க வேண்டும்.
                        11.  மந்த்ரம்
          “கன்யாம் கனக ஸம்பன்னாம்
கனகா பBரணைர் யுதாம்
தாDHAஸ்யாமி விஷ்ணவே துப்யம்
ப்ரம்ம லோகம் ஜிகீGEE ஷஹ“
(பொருள்  :- இக்கன்னிகையைத் தங்க ஆபர சகிதம் உனக்கு உரிமையாக்குகிறேன். பிரம்மலோகம் வரை உங்கள் புகழ் பரவட்டும்.)
பெண் அணிந்துள்ள நகை செட்டிகாரர் முன் மாப்பிள்ளை வீட்டார் பேசி அணிவித்த நகையாகும். கன்யாதானம் செய்த பின் பெண்ணின் பெற்றோர் ஒற்றைமுடி உள்ள ஒரு பூநூலை மணமகனுக்கு அணிவிக்க வேண்டும். இத்துடன் மணமகன் இரண்டு முடியுடன் கூடிய பூநூல் அணிகின்றான்.
மூன்றாம் முடி உத்தரீயத்திற்குப் பதிலாக அணிவது என்பது சாஸ்திரம்.
கன்யாதானத்திற்கு முன் புரோகிதர் மகாசங்கல்யம் செய்த உடன் மணமக்கள் இருவரின் தகப்பனாரும் பூநூல் தரிக்க வேண்டும்.
மாப்பிள்ளையின் கையை மாமனார் பிடித்துக் கொண்டு நான் இதுவரை வளர்த்த கன்னிகையை உனக்குக் கன்னிதானம் செய்து இருக்கின்றேன். இவளை நீ தர்ம, அர்த்த, காம, மோட்ச (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் கைவிடாமல் காப்பாற்ற  வேண்டும் என்று கூற வேண்டும்.
காப்பாற்றுகின்றேன் என்று மணமகன் கூற வேண்டும்.
மாங்கல்ய பூஜை
          புரோகிதர் முறைப்படி மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும்.
                          12. மாங்கல்ய தாரணம்
மாங்கல்ய பூஜைக்குப்பின் மாங்கல்யத்தைச் செட்டிக்காரர் முதலான பெரியோர்களும், சுமங்கலிகளும் தொட்டு ஆசி வழங்குகின்றனர்.
“மாங்கல்யம் தந்த்து நாநேன
மம ஜீவன ஹேது நாம்
கண்டே பBத்நாமி ஸீபBகேGE
த்வம் ஜீவ ஸதாDHA ஸதாம்“
(பொருள் – நூலில் கோத்துள்ள இம்மாங்கல்யத்தை நாம் இருவரும் இல்வாழ்வு வாழ்வதற்காக உன் கழுத்தில் சுபமாகக் கட்டுகின்றேன். உன் ஜீவன் இருக்கும்வரை நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.)
இச்சடங்குவரை மணமகள், மணமகனின் வலப்புறம் அமர்ந்து இருக்க வேண்டும்.
            13. அம்மி மிதித்து த்ருவனைக் காணல்
    மாங்கல்ய தாரணத்திற்குப் பின் மணமகன், மணமகள் கையைப் பிடித்துக் கொண்டு மணவறையைச் சுற்றி வர வேண்டும்.
1.    முதாலவது சுற்றில் அம்மிக்கல் காட்ட, பெண் தன் வலது காலின் நுனியால் மிதித்தல்.
2.   இரண்டாவது சுற்றில் த்ருவனைக் காட்டல்.
3.    மூன்றாவது சுற்றில் தேவதத்தையைப் போல், அருந்ததியைப் போல்
பதிபக்தியுடன் இரு எனக் கூற வேண்டும்.
அம்மிக்கல் மிதித்தலின் கருத்து – பெண்ணே!  கல்லைப் போல் உறுதியுடன் இரு. பகைவர்களை மிதித்து விடு. அவர்களை அழித்துவிடு என்பதுடன்,
ஜடவஸ்துக்களான அம்மியும், குழவியும் இணை பிரியாமல் இருக்கின்றன. இவை பிரியின் அரைத்தல் காரியம் நிகழாது. அறிவற்ற பொருள்கள் கூட இணைந்து இருந்து காரியம் நிகழ்த்துகின்றன. அறிவுள்ள நாம் அவைபோல் இணைபிரியாமல் இருந்து இல்லறம் செய்வோம் என்பதனையும் ஆன்றோர் கருத்தாகக் கூறுகின்றனர்.
சில இடங்களில் அம்மி, குழவிகளுக்குப் பதிலாக சந்தனக்கல், சந்தனக்கட்டையும், தானியங்களை அரைத்து மாவாக்க உதவும் கல்யந்திரத்தையும் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர்.
அனைத்திற்கும் கருத்து ஒன்றே, சந்தனக்கட்டையும் கல்லும் சேர்ந்தால் தான் சந்தனம் அரைக்க முடியும்.
அடிக்கல்லும், மேற்கல்லும் சேர்ந்தால்தான் தானியத்தை அரைக்க முடியும். இம்மூன்றும் வகையிலும் பிரிவில் காரியம் இல்லை. இணைப்பில் காரியம் உண்டு அதுபோல் நம் இணைப்பிலேயே இல்லறம் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களும் சுழலும் தன்மை கொண்டவை.த்ருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கின்றது. சிறுவயதிலேயே மன உறுதியால் மேன்மை பெற்றவன் த்ருவன். த்ருவனைப் போல் நம் உள்ளங்கள் ஒற்றுமையால் உறுதி பெறட்டும் என்பது கருத்து.
“த்ருவந்த் தே ராஜா வருணஹ
த்ருவம் தேவோ ப்ருஹஸ் பதிஹி
த்ருவந்த்த இந்த்ரஸ் சாக்னிஸ்ச
ராஷ்டரம் தாராயதாம் த்ருவம்“
            14. அட்சதா ரோபணம்
அம்மி மிதித்து த்ருவளைக் கண்டபின் மணமக்கள் நின்று கொண்டு மஞ்சள் அரிசி, மலர்கள் இவற்றை ஒருவர் சிரசில் மற்றவர் இட்டுக் கொள்ளல் வேண்டும்.
1)  மணமகன்  :  “ப்ரஜா மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
அட்சதையை மணமகள் சிரசில் இட வேண்டும்.
2)  மணமகள்   : “ ஸ்ரீயோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
அட்சதையை மணமகன் சிரசில் இட வேண்டும்.
3)  மணமகன்   : “தனம் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
மணமகள் சிரசில் அட்சதை இட வேண்டும்.
4)   மணமகள்  : “ஆயுர் மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி
மணமகன் சிரசில் அட்சதை இட வேண்டும்.
5)  இருவரும் “யக்ஹோ மே காம ஸம்ருத்தியதாம்“ என்று கூறி அட்சதை இட்டுக் கொள்ளல் வேண்டும்.
இதன் பின்னர்தான் பெண் மாப்பிள்ளைக்கு இடப்புறம் அமர, மற்றவர்கள் அட்சதை இட்டு ஆசி வழங்கல் வேண்டும்.
சில இடங்களில் மட்டும் பெண்ணை மணவறையில் அமர வைக்கும்போதே மணமகனின் இடப்புறம் அமர வைக்கின்றனர்.
முதலில் வலப்புறம் அமர்ந்து, மாங்கல்ய தாரணத்தின் பின் அக்னி வலம் அம்மி மிதித்து த்ருவனைக் கண்டு அட்சதா ரோபணத்தின் பின் இடப்புறம் பெண் அமர வேண்டியதுதான் முறைமை.
வலப்புறத்தில் முதலில் பெண் அமர்வது போகார்த்தமாக. அதாவது அறம், பொருள், இன்பம் என்னும் இவற்றைப் பெற வேண்டும் என்பதனைக் காட்ட வலப்புறம் துவக்கத்தில் அமர வேண்டும். இவற்றைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் இருவரும் வாழ்ந்து பின் ‘சதுர்த்தம்‘ என்னும் நான்காவது புருஷோத்தமான மோட்சத்தைப் பெற இவள் கணவனுக்குதவுபவள் என்பதனைக் காட்ட இடம்புறம் அமர வேண்டும் என்பது விதி.
அறம், பொருள், இன்பம், வீடு என உறுதிப் பொருள் நான்கு, இவற்றுள் அறம், பொருள், இன்பம் என போகார்த்தமானவை. வீடென்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலைமைத்து. இவ்வீட்டின்பம் இல்லறத்தின் முடிவில் மனைவியுடன் பெறத்தக்கது.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து முடிவில் சிறந்ததான வீட்டு நெறியை ஏற்க வேண்டும் என்பார் தொல்காப்பியர். “கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே“ என்பதைனைக் காண்க.
ஆரம்பித்திலேயே பெண்ணை இடப்புறத்தில் அமரவைத்தால் இருவரும் துறவு மார்க்கத்தில் ஈடுபடப் போகின்றனர் என்று பொருள் ஆகிவிடும்.
இந்நுணுக்கத்தை நன்கு உணர்ந்த நம் தேவாங்க முன்னோர் இன்று மணம் புரிந்து கொள்ளும் இவ்விருவரும் அறம், பொருள், இன்பம் என்னும் இவ்வுலக போகங்களை நன்கு பெற்று வாழ இருக்கின்றனர் என்பதனைக் காட்ட பெண்ணை வலப்புறத்திலும், இவர்களின் இல்லறத்தின் பயன் முடிவில் மோட்சமே என்பதனைக் காட்ட பெண்ணை இடப்புறத்திலும் அமர வைத்தனர்.
இவ்வுயர்ந்த முறை எப்படி நடுவில் நழுவியது ஒரு சில இடங்களில் மட்டும் என்பது தெரியவில்லை.
15. பூரி தானம் – சுகாசினி தானம்
   திருமணத்திற்குப் பின் மணப்பெண் வெற்றிலைப் பாக்கில் மஞ்சள், குங்குமம், தக்ஷிணையுடன் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கல். இவ்விதம் வழங்குவதின் நோக்கம் சுமங்கலிகளின் ஆசியால் மணமக்கள் தீர்க்காயுள், புத்திரர், பௌத்திரர் முதலான பாக்யங்களுடன் வாழ்வர். மணமகள் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள்.
    இதன்பின் நாகவல்லியும், செட்டிகாரர் முன் அவர் அனுமதியுடன் கங்கணம் அவிழ்த்தலும், பின் மஞ்சள் நீராடும் வசந்தமும் நடைபெறும். கங்கணம் கட்டும் போது மணமக்களுக்கு அவரவர் தாய்மாமன்மார் பலகாரம் உண்பிக்கின்றனர். மணமக்களுக்கு அவரவர் தாய்மாமன்மாரே சொந்தக்காரர்கள்.
கங்கணம் அவிழ்க்கும்போது மணமக்கள் ஒருவருக்கொருவர் பலகாரம் உண்பித்துக் கொள்கின்றனர். (பூவதோண்டல்)
நாகவல்லி முதலான அனைத்திற்கும் மந்திரங்கள் உண்டு. அவை ஈண்டுக் குறிப்பிடப்படவில்லை.
வேதவிதிகள், சடங்குகள் அனைத்தும் தட்சிணைகளோடு கூடியன. தட்சிணைகளோடு கூடியதுதான் யாகம்.
எனவே தட்சிணைகளைச் சக்திக்குத்தக்கவாறு மனமுவந்து தாராளமாகக் கொடுத்துப் புரோகிதர்களைக் கௌரவித்து அவர்கள் ஆசியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
தாம்பூலம் (தொட்டு வீளேவு)
நம் திருமண காலங்களில் மணமக்களுக்குக் கங்கண தாரணம் ஆனவுடன் செட்டிகாரர் முன்னிலையில் ஒருமுறையும் கங்கணம் அவிழ்த்தபின் ஒருமுறையும் இத்தொட்டு வீளேவு றடைபெறும். மணமக்களின் பெற்றோர்களும், உறவினர்களும் அமர்ந்து கொள்வர். இருதிறத்தாரின் கோத்ரங்களைச் செட்டிக்காரர் கேட்பார். இது சபை முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இச்சபைக்கு மணமகனின் செட்டிகாரர் தலைமை தாங்கி அமர்ந்து இருப்பார். அப்பொழுது தாம்பூல மரியாதை என்னும் தொட்டு வீளேவு நடைபெறும்.
(இந்த வீளேவு ஒவ்வொன்றும் முன்றுமுறை சொல்லத்தக்கது.)
1.  கெந்தாக்ஷ்சுத                   தாம்பூலம்
2.  விக்னேஸ்வர                  தாம்பூலம்
3.  ப்ருதிவி முலஸ்தானு    தாம்பூலம்
4.  ஆதிமுலம்                                “
5.  பராஸக்தி                                  “
6.  பரமேஸ்வர (இராமலிங்க)    “
7.  ஸ்ரீமகாவிஷ்ணு                        “
8.  ஸ்ரீசவுடேஸ்வரி                       “
9.  தேவல                                      “
10. தேவதத்த                                “
11. அக்நிதத்த                               “
12.  நாகதத்த                                
13.  வித்யாதர                              “
14.  புஷ்பதந்த                               “
15.  பேதாள                                   “
16.  வரருஷி                                 “
17.  தேவசாலி                             “
18.   தேவதாஸ்                 தாம்பூலம்
19.   திவ்யாங்க                         “
20.    தவளாங்க                          “
21.   விமலாங்க                         “
22.   காசிமடம்                           “
23.   ஸ்ரீசைலமடம்                    “
24.   ஹேமகூடமடம்               “
25.   ஸோணாசலமடம்           “
26.   ஸம்புசைலமடம்             “
27.   ரேவணாராத்யர்               “
28.   மருளாராத்யர்                  “
29.   ஏகோராமர்                       “
30.   பண்டிதாராத்யர்              “
31.   கஹனா ராத்யர்             “
32.   ஞானதேவி                      “
33.   குணாதேவி                      “
34.   சுசீலாதேவி                     “
35.   புஷ்பிணிதேவி                “
36.   அகோராதேவி                 “
37.   பஞ்சவர்ணபிருது            “
38.   கலியுக பொப்பாதேவி   “
39.    தாய் ஸ்தலம் தாராபுரம்   “
40.     ஸ்தலம்                          “
41.    பரஸ்தலம்                       “
42.    தாய்மென                         “
43.    கட்டெமென                      “
44.     செட்டிகாரர்                      “
45.     பெத்தர்                             “
46.    அத்துசாவரெ  குல          “
47.     சேக்ஷராஜ்                       “
48.    பூமிசேக்ஷராஜ்                 “
திருமணம் முடிந்து மணமக்களின் கங்கணம் அவிழ்த்த பின்னும் ஒருமுறை இத்தாம்பூல மரியாதைகள் நடைபெறும்.
மற்ற கோத்திரத்தாருக்கு மஞ்சள் கொம்பு, கொத்துமல்லி, வெல்லஅச்சு, காசுகள் ஆகியன முறைப்படி வழங்கும் மரியாதைகளும் நடைபெறும்.
                            ஸ்தலது கொம்பு
ஒன்பது கணுக்கள் கொண்ட பச்சை முங்கிலை நடவேண்டும். மஞ்சள் துணியில் நவதான்யம், காசு முதலியன முடித்து, இம்மஞ்சள் துணியால் அரசங்கொத்தை முங்கிலில்  சேர்த்துக் கட்ட வேண்டும். உடன் தர்ப்பையும் சேர்க்க வேண்டும்.
நிலத்தில் நடப்படும் முங்கில் ஒன்று பலவாகத்தானே பெருகி வளர்ந்து தழைத்துச் செழித்து போல் இன்று மணநாளில் ஒன்று கூடும். இத்தம்பதியரின் இல்லறம் நல்லறமாகி இக்குலம் பெருகிச் செழிக்க வேண்டும் என்பது முங்கில் நடுவதன் தாத்பர்யம்.
“முங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழவேண்டும்“ என்பது பழமொழி.
அரசங்கொழுந்து கட்டுவதன் கருத்து
    அரசமரத்தின் விதை மிகச்சிறியது. அதிலிருந்து முளைக்கும் மரமோ மிகப்பெரியது. நாம் செய்யும் நற்செயல் சிறியதாயினும் அதினின்று பெருகும் நற்பயன் மிகப் பெரியது.
எனவே சிறியவை என்று கருதாமல், செயல்கள் நல்லவை ஆயின் அவற்றை உடனே இத்தம்பதியர் செய்ய வேண்டும், என்று இதன்வழி சுட்டிக்காட்டப் படுகின்றது.
அரசமரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும் நடுவில் விஷ்ணுவும் நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே திரிமூர்த்திகளின் வணக்கம் செய்யப்படுகிறது. மணவறையில் திரிமுர்த்திகளின் சானித்யம் ஏற்படுகின்றது.
மூலதோ ப்ரம்ஹரூபாய மத்யதோ
விஷ்ணு ரூபிணி
அக்ரதா சிவரூபாய வ்ருக்ஷப ராஜாயதே நமஹ
முளைப் பாலிகை இடுதல்
   நவதான்யங்களை முளைக்க வைத்து அவற்றைச் சுமங்கலிகள் எடுத்து வந்து மணவறையில் வைத்து இருப்பார்கள். இப் பாலிகைகளைப் பார்த்துக் கொண்டு திருமாங்கல்யம் கட்ட வேண்டும். இம்முளைகள் செழித்து வளமுடன் இருப்பது போல் உங்கள் இல்லறம் செழிக்க வேண்டும் உம் குலம் செழிக்க வேண்டும் என்பது உட்கருத்து.
திருமாங்கல்யம் மாற்றும் முறை
    திருமணம் முடிந்து, முன்றாவது மாதத்தில் மாங்கல்யம் மாற்றிக் கொள்ளல் வேண்டும் என்பது விதி. நூலில் கோர்த்து மாங்கல்யம் கட்டப்பட்டது. இந்த நூலை எடுத்துவிட்டுக் கயிற்றில் மாங்கல்யம் கோர்த்துக் கட்டுவதே இச்சடங்கு ஆகும்.
ஆடி, புரட்டாசி, பங்குனி மாதங்களில் மாங்கல்யம் மாற்றக் கூடாது. வைகாசியில் திருமணம் நடந்தால் முன்றாவது மாதம் ஆடிமாதம், ஐந்தாம் மாதம் புரட்டாசி. எனவே இவர்கள் ஏழாம் மாதமாகிய கார்த்திகையில்தான் மாற்ற வேண்டும்.
ஆனால் ஏழு மாதங்களுக்கு மாங்கல்யத்தில் கோர்த்த நூல் தாங்காது நைந்து விடும் என்பதால் சிலர் முதல் மாதமான வைகாசியிலேயே மாற்றிக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment