அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/14/14

முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014

                  ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் துணை
           முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014

 

இந்த விழாவில் பதியப்படும் அனைத்து பதிவுகளும் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டு பொக்கிஷமாக அனைவரும் வேண்டும் பொழுது எடுத்து படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..... 

 

 

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நமது அம்மனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 5 நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் கலை படைப்புகளை முகநூலில் ஊக்குவிப்பதும் ஊர் எல்லைகளைக் கடந்து தேவாங்கர் என்னும் உணர்வு மேலோங்குவதும் ஆகும்.

இடம்; முகநூல்(FACEBOOK) https://www.facebook.com/groups/KannadaDevangar/
Kannada Devanga Chettiar

நாள்; 23.07.2014 முதல் 27.07.2014

பண்டிகை நடைபெறும் 5 நாட்கள் நீங்கள் இந்த முகநூல் பக்கத்தில் உங்களின் படைப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். உங்களின் படைப்புகளை நமது சமூகத்தை சார்ந்தவையாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த 5 நாட்கள்
- சௌண்டம்மனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம்
- அம்மனுக்கு கவிதை எழுதலாம்
- சௌண்டம்மன் படத்தை edit பண்ணலாம்
- உங்களின் ஊரில் நடைப்பெறும் ஆடி அமாவாசை கொண்டாட்டப் படங்களைப் பதிவேற்றம் செய்யலாம்
- வீடியோ பாடல் செய்யலாம்
- நமது சமூகத்தைப் பற்றிய அரிய செய்திகளைப் பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம்
- சௌண்டம்மன் ஓவியங்களைப் பதிவேற்றம் செய்யலாம்
- சௌண்டம்மன் பாடல்களை record செய்யலாம்
- கட்டுரை எழுதலாம்
- பழைய சௌண்டம்மன் பாடல்களுக்கு புது இசை கொடுக்கலாம்
- நெசவும் அதை சார்ந்த செய்திகளையும் ஓவியங்களையும் பகிரலாம்
இந்த 5 நாட்களுக்கு மற்ற பொது பதிவுகளைத் தவிர்க்கவும். பண்டிகை முடிந்த பின், நீங்கள் மீண்டும் உங்கள் பொது பதிவுகளை போடலாம். பத்தாயிரம் குலத்தைக் காத்த அன்னைக்கும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நம்மவர்களை இணைத்த அன்னைக்கும் இந்த பண்டிகை சமர்ப்பணம். இந்த பண்டிகையில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் யாரும் வரி செலுத்த வேண்டியதில்லை, நமது அம்மனை வாழ்த்தினால் போதும். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் மற்றும் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. முகநூலில் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். பதிவேற்றுபவர்கள் அவர்களின் பெயரைத் தவறாமல் பதிவிடவும்.
தரணியெங்கும் உள்ள தேவாங்க மக்களே…வீறுக்கொண்டு வாருங்கள்…..உங்களை படைப்புகளைப் போடுங்கள்..

நன்றி KDC முகநூல் குழுமம் 

No comments:

Post a Comment